பாஜக வெறுப்பரசியல் செய்து வருகிறது ! ரோடு ஷோவில் கலக்கும் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு !!

Published : Jun 08, 2019, 08:10 AM IST
பாஜக வெறுப்பரசியல் செய்து வருகிறது ! ரோடு ஷோவில் கலக்கும் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு !!

சுருக்கம்

ஊடகங்கள், பண பலம் போன்றவற்றைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ள  பாஜக தற்போது வரை வெறுப்பரசியல் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. 

இதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க  ராகுல் காந்தி  தற்போது கேரளா வந்துள்ளார்.. 

டெல்லியில் இருந்து நேற்று  பகல் 2 மணிக்கு புறப்பட்ட  ராகுல் காந்தி, ஹரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தார். தொடர்ந்து 3 மணிக்கு திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அங்கு திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நிலம்பூர், எறநாடு, ஹரிக்கோட் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ‘ரோடு ஷோ’க்களில் ராகுல் காந்தி கலந்து கொண்டு  வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவிக்கிறார். அவர் மொத்தம் 6 சாலை பயணங்களில் பங்கேற்க உள்ளார். 

கொட்டும் மழையிலும் நேற்று ராகுல் காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூறினர். Nation Need Ragul Gandhi …We support Ragul Gandhi .. என்று எழுதப்பட் பதாகைகளை தொண்டர்கள் கைகளில் ஏந்தி ராகுலை வரவேற்றனர்.

ஒரு கட்டத்தில் திறந்த  வேனில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி மழையில் நனைந்து கொண்டே தொண்டர்களுடன் நடந்து சென்றார். இதைத் தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய அவர், பாஜக இந்தித் தேர்தலில் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும் ஊடகங்கள், பணபலம், பொய்யான வாக்குறுதி போன்றவற்றின் மூலமே பாஜ வெற்றி பெற்றதாகவும், தற்போது வரை அவர்கள் வெறுப்பரசியல் செய்து வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!