
பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி !! இசைக் கருவியை வாசித்து அசத்தல் !!!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பழங்குடியின நடனக் கலைஞர்களோடு சேர்ந்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நடனம் ஆடியும், இசைக் கருவியை வாசித்தும் மகிழ்ந்தார்.
குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்த குஜராத்தில் பாஜக ஆட்சி நடைப்றறு வரும் நிலையில் இந்த முறை எப்படியாவது பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.
இதற்காக நவ்சர்ஜன் யாத்ரா என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்கி குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக குஜராத் மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, Chhota Udaipur மாவட்டத்தில், பழங்குடியின நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து 'Timli' என்ற பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தார்.
ராகுல் காந்தி பழங்குடியின மக்களுடன் நடனமாடியபடியே இசைக்கருவியையும் வாசித்து அனைவரையும் கவர்ந்தார்.