
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நொடிக்கு நொடிக்கு அடுத்த என்ன நடக்க போகிறதோ என்ற சிந்தனை தான் மேலோங்கி நிற்கிறது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்தன் விராட் கோலி, ஒரு வித்தியாசமான சவாலை பிரதமர் மோடிக்கே வைத்துள்ளார்
அது என்ன அப்படிப்பட்ட சவால் என எண்ண தோன்றுகிறதா..?
அதாவது விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்வது போல ஒரு வீடியோவை எடுத்து " நான் பிட்டாக இருந்தால் தான் நாடே பிட்டாக இருக்கும் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாய்னா நேவால் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு...இந்த வீடியோவை டேக் செய்து உள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்வது போல வீடியோ எடுத்து அதனை தன் மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் ,தல தோனியிடம் பிட்னஸ்கான சவாலை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், தான் கோலியின் சவாலை ஏற்பதாகவும் விரைவில் தான் உடல் உறுதியாக உள்ளதை நிரூபிக்கும் விதமாக வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதனை உற்று நோக்கிய ராகில் காந்தி, விராத் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் உள்ளதே அதனை குறைக்க சவால் எடுத்துக் கொள்வாரா? என்ற கேள்வியை முன் வைத்து பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.
அதில் டியர் பிஎம் என குறிபிட்டு,#fuelchallange என குறிப்பிட்டு உள்ளார்.விளையாட்டாக ஆரம்பித்த சவால் விஷவரூபம் எடுக்கிறது....!