உங்க மிரட்டலுக்கொல்லாம் நாங்க பயப்படப்போவதில்லை…. ரஃபேல் ஆவண விவகாரத்தில் பாஜகவுக்கு இந்து என்.ராம் பதிலடி !!

Published : Mar 08, 2019, 08:32 AM IST
உங்க மிரட்டலுக்கொல்லாம் நாங்க பயப்படப்போவதில்லை…. ரஃபேல் ஆவண விவகாரத்தில் பாஜகவுக்கு இந்து என்.ராம் பதிலடி !!

சுருக்கம்

ரஃபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை எப்படிப் பெற்றோம் என்கிற விவரங்களை வெளியிட மாட்டோம் என்று தி இந்து குழுமத்தின் தலைவரான என்.ராம் கூறினார். இது தொடர்பாக மத்திய அரசின் மிட்டலுக்கு அஞசமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகையில் அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டிருக்கின்றன என்றும், அவற்றை வெளியிட்டவர்கள் அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின்படி குற்றவாளிகள் என்றும் கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள என்.ராம், பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து இந்த ஆவணங்களை நாங்கள் திருடவில்லை. இவற்றை மிகவும் ரகசிய வட்டாரங்களிலிருந்து பெற்றோம். இந்த ஆவணங்களை எப்படிப் பெற்றோம் என்பதை நானோ அல்லது வேறெவருமோ வெளிப்படுத்திட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த ஆவணங்களை எங்களிடம் கொடுத்தவர்களுக்கு அவ்வாறு வெளிப் படுத்திட மாட்டோம் என்று வாக்குகொடுத்திருக்கிறோம். இரண்டாவதாக, பொதுநலன்கருதி புலனாய்வு இதழியல் மூலமாக இந்தத் தகவல்களை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம் என ராம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான முக்கியமான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பலமுறை கோரப்பட்டபோதிலும் அவற்றை அரசாங்கம் வெளியிடாமல் மறைத்து வைத்தது.

மூன்றாவதாக, இப்போது இந்த ஆவணங்கள் அரசாங்கத்திடமிருந்து திருடப்பட்டதாக அரசேகூறுவதிலிருந்து, இதில் உள்ள  விவரங்கள் உண்மையானவை என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டது போலாகிறது எனவும் ராம் தெரிவித்துளளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!