பியூனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது...! ஆர்.எஸ்.பாரதிக்கு எஸ்.பி.வேலுமணி பதிலடி!

By vinoth kumarFirst Published Sep 12, 2018, 1:21 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விட்டிருந்த நிலையில், விவாதத்துக்கு தயார் 
என்று என ஆர்.எஸ்.பாரதி கூறியியதற்கு, பியூன் வேலை பார்ப்பவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று 
எஸ்.பி.வேலுமணி கடுமையாக கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விட்டிருந்த நிலையில், விவாதத்துக்கு தயார் என்று என ஆர்.எஸ்.பாரதி கூறியியதற்கு, பியூன் வேலை பார்ப்பவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று எஸ்.பி.வேலுமணி கடுமையாக கூறியுள்ளார்.  ஊழலின் மணியான கதாநாயகனாக, அதிமுக அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி இருந்து கொண்டு, அவரது சகோதரரின் நிறுவனங்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சி துறையை கொள்ளையாட்சி துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

தமிழக அரசுக்கு எதிராக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி துறை விதியை மீறி எந்த டெண்டரும் 
வழங்கப்படவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், அப்படி என் மீதான புகாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால், திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் அவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சி துறையில் எந்தவிதமான முறைகேடு தொடர்பான ஆதாரங்களுடன் விவாதிக்க தயார் என்று சவால் விட்டிருந்தார். 

இது தொடர்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பியூன் வேலை பார்க்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் சொல் 
முடியாது என்றும் அவர் மு.க.ஸ்டாலின், தலைவர் சொல்லும் வேலைக்கு பெட்டிசன் கொடுக்கும் பியூன் வேலை பார்ப்பவர். அவர் எல்லோர் மீதும் மனு கொடுப்பார். அவ்வளவுதான். என்னை பதவி விலகச் சொன்னது ஸ்டாலின்தான். அமைச்சர் பதவி மட்டுமல்ல, கட்சியின் மாநில, மாவட்ட செயலாளர் பதவி 12 ஆண்டுகளாக வகித்து வருகிறேன். அந்த பதவிகளை விட்டு விடுகிறேன். 

அதேபோல அவர் எதிர்கட்சி தலைவர் பதவி, கட்சி தலைவர் பதவியை விட்டு வரட்டும் நான், ஏற்கனவே கூறியபடி அந்த பதவிகளை, துரைமுருகனுக்கோ அல்லது குடும்பத்தை சேர்ந்த அழகிரிக்கோ கொடுத்துவிட்டு வரட்டும். அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலைவிட்டே விலகுகிறேன். அப்படியில்லாவிட்டால் அவர் விலகட்டும். இதுதான் என் கோரிக்கை. எனவே ஆர்.எஸ்.பாரதிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அதற்கு பதில் சொல்ல கட்சியில் கீர்மட்டத்தில் அநேகம்பேர் இருக்கின்றனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். அவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!