பத்மஷேசாத்ரினா பொங்குறீங்க? வைரமுத்துனா பம்முறீங்க? கனிமொழிக்கு சின்மயி கேட்ட கேள்வி..!

By Selva KathirFirst Published May 25, 2021, 11:08 AM IST
Highlights

சென்னை கேகே நகர் பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கொதித்திருந்த நிலையில், அதே கொதிப்பு தான் உள்ளிட்ட 16 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த போது ஏன் இல்லை என்று சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கேகே நகர் பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கொதித்திருந்த நிலையில், அதே கொதிப்பு தான் உள்ளிட்ட 16 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த போது ஏன் இல்லை என்று சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மீது மாணவி ஒருவர் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றில் பாலியல் புகார் கூறியிருந்தார். ஆன்லைன் வகுப்பிற்கு ராஜகோபாலன் வெறும் துண்டை மட்டுமே கட்டிக் கொண்டு வருவதாகவும், லேட் நைட்டில் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்புவதாகவும், சினிமாவிற்கு கூப்பிடுவதாகவும் ஸ்க்ரீன் ஷாட்டுகளோடு கூறிய புகாரை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார். தற்போது பிரதான ஊடகங்களில் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் பிரச்சனையை அறிமுகம் செய்து வைத்தவர் சின்மயி தான்.

சின்மயி இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிறகு தான் மேலும் பல பிஎஸ்பிபி பள்ளி மாணவிகள் தங்களுக்கு அங்கு ராஜகோபாலன் மட்டும் அல்லாமல் வேறு பல ஆசிரியர்களால் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பட்டியலிட்டனர். தொடர்ந்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியும், இந்த விவகாரத்தை கையில் எடுத்தார். பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முறையான விசாரணை தேவை என்றும் கனிமொழி கூறியிருந்தார்.

மேலும் மாணவிகளின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத பத்மஷேசாத்ரி பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிடப்படும் என்றும் கனிமொழி கூறியிருந்தார். இதனை அடுத்து தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சியும் இதே பாணியில் ட்வீட் செய்திருந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு படி மேலே போய் அறிக்கை வெளியிட்டார். இதன்பிறகு நடைபெற்ற அனைத்தும் நாம் அறிந்தது தான். தற்போது ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சின்மயி வேறு ஒரு ட்வீட் செய்திருந்தார். கனிமொழி பத்மஷேசாத்ரி பள்ளி தொடர்பாக பதிவிட்டிருந்த ட்வீட்டை டேக் செய்துள்ள சின்மயி, உண்மையிலேயே நீங்கள் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதே போல் நான் உள்ளிட்ட 16 பெண்கள் வைரமுத்தது மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கனிமொழியை சின்மயி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ராதாரவி தலையிட்டு தன்னை எந்த பணியும் செய்யவிடாமல் தடுக்கும் நிலையிலும் உண்மை அப்படியே தான் இருக்கிறது என்றும் சின்மயி கூறியுள்ளார்.

பத்மஷேசாத்ரி பள்ளி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள உங்களுக்கு என்னுடைய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்கிற ரீதியிலும் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சின்மயி கூறுவது சரி தான், பாலியல் புகார் என்ற வந்துவிட்டால் பத்மஷேசாத்ரி பள்ளி மாணவர்கள் மீது காட்டும் அக்கறையை வைரமுத்துவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் மீதும் காட்டுவது தான் நியாயம். கனிமொழி மேடம் கருத்து சொல்வாரா?

click me!