பெண்களின் ஆயுதமே மௌனம் தான்; 2024 தேர்தலில் அது எதிரொலிக்கும் - திமுகவுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

By Velmurugan sFirst Published Jul 8, 2023, 5:57 PM IST
Highlights

பெண்களின் மிகப்பெரிய ஆயுதமே அவர்களின் கண்ணீரும், மௌனமும் தான். 2024 தேர்தலில் அது எதிரொலிக்கும் என்று திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. நீட்டிலிருந்து விலக்கு பெற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. 

குடும்ப தலைவிகளுக்கு மாதம் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தி உள்ளது. இது பெண்களை ஏமாற்றம் செயலாக உள்ளது. ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிக்கு உரிமை தொகை கிடையாது என்பது நூற்றுக்கு 99 பேருக்கு இந்தத் தொகை சென்றடையாது என்பதைத் தான் காட்டுகிறது. அவசர கோளத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். 

புதுச்சேரியில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்; சுனாமி அச்சத்தில் வீடுகளை காலி செய்யும் மீனவர்கள்

சொன்னதை செய்ய மாட்டோம் என்பது போல் தான் திமுக அரசு நடந்து கொள்கிறது. பெண்களின் பெரிய ஆயுதம் கண்ணீரும், மௌனமும் தான். அது 2024ம் ஆண்டு தேர்தலில் அது எதிரொலிக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதற்கு எதிராக புதிய தமிழகம் மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு வெறும் வாய் சவடாலாக மட்டுமே பேசி வருகிறது. 

திமுக அரசு  ஆட்சியா, மக்கள் நலனா என்று வரும் போதெல்லாம் மக்கள் நலன் மட்டுமே காவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு, காவிரி நீர் பங்கீடு என அனைத்து பிரச்சினைகளிலும் திமுக அரசு அவ்வாறே செயல்பட்டு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி வேண்டும் என்பதற்காக திமுக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

திமுக அமைச்சர்கள் ஐ.டி.க்கும், அமலாக்கத்துறைக்கும் பயந்து இரவில் தூங்காமல் இருக்கின்றனர் - செல்லூர் ராஜூ

இந்த விவகாரத்தில் திமுக சுயநலமாக செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். 6ம் தேதி தொடங்கி தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பூரண மது விலக்கு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. ஜூலை 15ல் அனைத்து மாவட்டங்களிலும், டாஸ்மாக் முன்பு பெண்களை திரட்டி மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தப்படும். ஆகஸ்ட் 15 க்குள் 100 பொது கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!