பப்ஜி கேம் விளையாடிய சிறுவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பங்கள் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.அதற்குள் பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த 17லட்சம் ரூபாயை பப்ஜி கேமில் விளையாடி தீர்த்திருக்கிறார்.
பப்ஜி கேம் விளையாடிய சிறுவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பங்கள் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.அதற்குள் பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த 17லட்சம் ரூபாயை பப்ஜி கேமில் விளையாடி தீர்த்திருக்கிறார்.
பப்ஜி கேம் விளையாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இடம் பெற்றுள்ளளார்கள். இந்த கேம் விளையாட ஆரம்பித்தால் போது நிறைய நண்பர்கள் உள்ளே நண்பர்களாக வந்து விடுவார்கள். இந்த விளையாட்டானது விளையாடு நபரின் முழு கவனத்தையும் ஈர்த்துவிடும்.அருகில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் விளையாடும் ஆட்களும் உண்டு. இந்த விளையாட்டில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள் தாங்க முடியாமல் மாணவர்கள் தற்கொலைக்கோ மாரடைப்பு ஏற்பட்டோ இறந்து போகிறார்கள்.
அதன்படி பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெற்றோர் வங்கி கணக்கில் இருந்த ரூ. 17 லட்சம் தொகையை இன்-ஆப் பர்சேஸ்களுக்கு செலவிட்டுள்ளார். பஞ்சாபின் கரார் பகுதியை சேர்ந்த 17 வயதான இளைஞர் தனது தந்தையின் மருத்துவ செலவிற்கு சேமிக்கப்பட்ட தொகையை பப்ஜி மொபைலில் செலவிட்டுள்ளார்.இளைஞர் தனது பப்ஜி மொபைல் அக்கவுண்ட்டினை அப்கிரேடு செய்ய மூன்று வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு மட்டுமின்றி தனது குழுவினருக்கும் இவர் பப்ஜி மொபைலில் செலவு செய்திருக்கிறார். வங்கி செலவீன அறிக்கையை பார்த்து அந்த இளைஞனின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து போனார்கள்..
பப்ஜி மொபைல் கேமில் ரூ. 17லட்சம் செலவிட்ட இளைஞரின் தந்தை ஓர்அரசாங்க அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. அவர் உடல்நல குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வருவதும் இதற்காக அந்த தொகை சேமிக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி பப்ஜி மொபைல் மூலம் டென்சென்ட் நிறுவனம் மே மாதத்தில் மட்டும் ரூ. 1668 கோடிகளை வருவாயாக ஈட்டி இருப்பதாக சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்தாண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்திலேயே "டென்சென்ட்" நிறுவனம் இதுவரை பப்ஜி மொபைல் கேம் மூலம் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.