
புதுச்சேரி அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதைவிட தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதையே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி விரும்புகிறார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப், டுவிட்டர், முகநூல் போன்ற வெளியிட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.
அரசின் ரகசியங்கள் இதன் மூலம் வெளியாகிறது என்றும் இது சட்டப்படி குற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு மேடைகளில் அமர்ந்து கொண்டு கவர்னரே போட்டோ எடுப்பது, செல்பி எடுத்துக்கொள்வது என கிரண் பேடி அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்றும் அவை நாகரீகம் கருதி அவர் இதைப் போன்ற செய்கைகளை அவர் தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் என்றால் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும் என்றும், அதனால் முதலமைச்சர் எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ரெங்கசாமி, அரசு தொடர்பாக எந்த முடிவெடுத்தாலும் அப்பா பைத்தியசாமியைக் கேட்டு முடிவெடுப்பார் ஆனால் நான் மக்களைக் கேட்டுத்தான் முடிவெடுப்பேன் என தெரிவித்தார்.