புதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.!!

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2020, 12:30 AM IST
Highlights

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படது, சட்ட மன்றத்தில் அறிவித்தது என எதனையும் நிறைவேற்றவில்லை. 

T.Balamurukan.
புதுவை அரசி
ன் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து இலவச மிக்சி, கிரைண்டர், குக்கர், தையல் எந்திரம், லேப்டாப், இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.

 'ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அவருக்கு சிலை வைப்பது உள்ளிட்ட எதையும் செய்யாத முதலமைச்சர் நாராயணசாமி தன்னை சிறுமைப்படு்த்திக்கொண்டார். தவறான எண்ணம் கொண்ட முதலமைச்சரின் செயல்பாட்டால், தான் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு அரசுக்கும் தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படது, சட்ட மன்றத்தில் அறிவித்தது என எதனையும் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாராயணசாமி அரசியல் ரீதியில் மத்திய அரசுடனும், கவர்னருடனும் மோதல் போக்கினை கடைபிடித்து வருகிறார்

.


ஏழை மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாதது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெறாதது, இலவச அரிசி வழங்காதது, லேப்டாப் வழங்காதது, முதியோர் உதவித்தொகையை உயர்த்தாதது, மின்கட்டணத்தை குறைக்காதது மக்களிடம் இந்த அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.முதல்வர் நாராயணசாமி அறிவித்த 252 அறிவிப்புகளில் எதயுமே செய்யவில்லை.   காங்கிரசுடன் தி.மு.க.இருப்பதால் அவர்களும் கூட்டணி அரசின் செயல்பாடுகளை கண்டு கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டினார்.இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

click me!