கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி..! புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jul 23, 2020, 4:28 PM IST
Highlights

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. 

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின், சோதனை செய்யப்பட்டுவருகிறது. கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் ஆகிய இரண்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் இதுவரை 2421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1400 பேர் குணமடைந்த நிலையில், 987 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 34 பேர் புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, கொரோனா குறித்த விவாதத்தின் போது, அவை உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது பதிலளித்து பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசிடமிருந்து கோரிய நிவாரண நிதி சரியாக கிடைக்காதபோதிலும், புதுச்சேரி அரசின் வருவாயை மட்டுமே வைத்து, கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். 
 

click me!