
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2 ஆவது காகிதமில்லா பட்ஜெட்ட தாக்கல் செய்யப்பட்டது. இந்த பஜ்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான 2 ஆவது நாளாக பொது விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது இறுதியாக பேசிவரக்கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கடத்த காலத்தில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விரிவாக பேசியிருந்தார். அப்போது மக்கள் நல பணியாளர்கள் குறித்து சில கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தது திமுக அரசு, ஆனால் அதன் பின்னதாக வந்த அதிமுக அரசானது அவர்கள் அனைவரையுமே வீட்டு அனுப்பி விட்டீர்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் அனைவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியது தான் இன்றைய அரசு என்று குறிப்பிட்டார்.
அதே வேளையில் நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்ததன் பின்னதாக மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த காலங்களில் திமுக எடுத்து வந்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததன் பின்பாக மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கு பணி வழங்கப்படும் என கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்க கூடிய இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.