காலை முதலே தடுப்பூசி செலுத்திக்கொள்ள காத்திருந்த பொது மக்கள் ஏமாற்றம்.. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு..

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2021, 10:27 AM IST
Highlights

கடந்த மாதத்தை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தினந்தோறும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்கின்றனர். 

கொரொனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வரக்கூடிய சூழலில் இந்த வைரசை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில்  பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இன்னும் மத்திய அரசிடமிருந்து வந்து சேராததால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதத்தை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தினந்தோறும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்கின்றனர்.  தற்போது வரையிலும் மத்திய அரசிடம் இருந்து 96 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு இருக்கும் நிலையில், அதில் 89 லட்சம் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டு இருக்கிறது. 

தற்போது தமிழக அரசின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டு வருவதால், தடுப்பூசி செலுத்த காலையிலேயே வந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு நிலைமை எடுத்து கூறியதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
 

click me!