காஞ்சி மடத்தில் ஜெயேந்திரர் உடல்…. பக்தர்கள், பொது மக்கள் அஞ்சலி !!

Asianet News Tamil  
Published : Feb 28, 2018, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
காஞ்சி மடத்தில் ஜெயேந்திரர் உடல்…. பக்தர்கள், பொது மக்கள் அஞ்சலி !!

சுருக்கம்

Public people paid homage to sankarachariyar

மாரடைப்பால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியரின் உடல் சங்கர அடத்தில் பொது மக்கள் மற்றும் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்யீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரத்தில் உலகப் புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம் உள்ளது.  காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார்.  காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற்று வந்தனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மேலாளராக இருந்த சங்கர ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் இன்று காலை 8.10 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர் பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 

டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச் சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணமடைந்தார். 

9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சித்திரவதையின் நரகம்..! பாஜக ஆட்சியில் நாட்டில் பரவும் பேராசையின் தொற்றுநோய்... ராகுல் அட்டாக்..!
திமுகவை வீழ்த்த பிளான் ரெடி.. தீய சக்தியை வேரறுப்பேன்.. சபதம் எடுத்த சசிகலா!