இந்துத்வா மீது சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு சந்தன அபிஷேகமா..? பி.டி.அரசகுமாரின் பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

Published : Dec 01, 2019, 06:04 PM ISTUpdated : Dec 02, 2019, 11:21 AM IST
இந்துத்வா மீது சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு சந்தன அபிஷேகமா..? பி.டி.அரசகுமாரின் பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

சுருக்கம்

திருமண விழாவில் திமுக உறுப்பினராகவே அரசகுமார் பேசியது கண்டிக்கத்தக்கது என மாநில பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். இந்துத்வா மீது சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு சந்தன அபிஷேகம் செய்தது திமுக விசுவாசமா என கேள்வி எழுப்பினார். மேலும், அரசகுமார் பேச்சை பாஜக தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இந்துத்வா மீது சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு சந்தன அபிஷேகம் செய்தது திமுக விசுவாசமா என பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமாருக்கு அக்கட்சி பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழா புதுக்கோட்டையில் உள்ள ஏடிஆா் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய  பி.டி.அரசகுமார்;- காலம் கணியும், காரியங்கள் தானாக நடக்கும், மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார், நாம் அதை பார்க்க போகிறோம். எம்.ஜி.ஆருக்கு பின் நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என கூறியுள்ளார். உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்த மு.க.ஸ்டாலின் என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பார். மு.க.ஸ்டாலின் முதல்வராக நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்சனையின் போதே செய்திருப்பார். ஜனநாயக முறையில் முதல்வராக விரும்புபவர் மு.க.ஸ்டாலின் என பாஜக நிர்வாகி புகழாரம் சூட்டினார். இவரது பேச்சு பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருமண விழாவில் திமுக உறுப்பினராகவே அரசகுமார் பேசியது கண்டிக்கத்தக்கது என மாநில பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். இந்துத்வா மீது சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு சந்தன அபிஷேகம் செய்தது திமுக விசுவாசமா என கேள்வி எழுப்பினார். மேலும், அரசகுமார் பேச்சை பாஜக தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி