மகாராஷ்டிராவை அடுத்து கோவாவில் ஆட்சி... பாஜகவைத் தெறிக்கவிடும் சிவசேனா!

By Asianet TamilFirst Published Dec 1, 2019, 5:45 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதனையத்து கூட்டணியிலிருந்து அமைச்சர் பதவியில் இருந்த சிறு கட்சிகளுக்கு கல்தா கொடுத்துவிட்டு, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்த கோவா பார்வர்டு கட்சி தற்போது சிவசேனாவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கோவா மாநிலத்திலும் ஆட்சி அமைப்போம் என்று சிவசேனா அதிரடியாக அறிவித்துள்ளது.

 
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளன. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் இந்த அரசு அமையாமல் இருக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், அது நடைபெறவில்லை. மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து சிம்மசொப்பனாம மாறியுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கோவாவிலும் ஆட்சி அமைப்போம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.


கோவா மாநிலத்தில் உள்ள கோவா பார்வர்டு கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சர்தேசாய்,  “மகாராஷ்டிராவில் நடந்த மாற்றம் நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. மகாராஷ்டிராவில் நடந்தது போன்று கோவாவிலும் நிகழ்த்த முயல்வோம்'' எனத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “கோவா பார்வர்டு கட்சி்யின் 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 4 பேர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். அதேபோல கோவாவில் பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் எம்.எல்.ஏக்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளார்கள்.
கோவாவில் அமைந்துள்ள பாஜக ஆட்சியே அறத்துக்கு மாறான ஆட்சி. அங்கு பல கட்சிகளுடன் சேர்ந்து தனியாக ஒரு கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதில் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்க உள்ளோம். விரைவில் மகாராஷ்டிராவைப் போன்று கோவாவிலும் அதிசயம் நிகழும்”எனத் தெரிவித்தார்.


கோவாவில் 2017ல் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல், கோவா பார்வர்டு உள்பட சிறு கட்சிகளுடன் சேர்ந்து அமைத்த கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதனையத்து கூட்டணியிலிருந்து அமைச்சர் பதவியில் இருந்த சிறு கட்சிகளுக்கு கல்தா கொடுத்துவிட்டு, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனால் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்த கோவா பார்வர்டு கட்சி தற்போது சிவசேனாவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!