தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை உடனே வழங்குக..!! நிர்மலா சீதாராமனிடம் கறாராக பேசிய அமைச்சர் ஜெயக்குமார்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2020, 9:47 AM IST
Highlights

அமைச்சர்கள் குழு பரிந்துரையின் படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நிலுவை தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

தமிழகத்திற்கு சேர வேண்டிய ரூபாய் 12,258.94 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் 42வது சரக்கு மற்றும் சேவை வரி மன்ற கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். 

அதில் அவர்  பேசியதாவது:- 2017-2018 ஆம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி தீர்வு  தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை முடிவுசெய்து தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி நிலுவையாக ரூபாய் 4321 கோடி வழங்கப்பட வேண்டும் என ஒப்புக் கொண்டுள்ளது.

அமைச்சர்கள் குழு பரிந்துரையின் படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நிலுவை தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது கோவில் 19 நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதி நிலைமையை குறைக்க எம்மாநிலத்திற்கு பேருதவியாக இருக்கும். எனவே அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அதை செயல்படுத்தி நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டிற்கு 2020-2021 ஆம் ஆண்டில் ஜூலை 2020 வரையிலான காலத்திற்கு 12,258.94 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளது. covid-19 நோய் தொற்றை எதிர்த்து போராட சரக்குகள் மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவது மிகவும் அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவை வரி இழப்பீட்டு  நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது மிகவும் அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசுக்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வமான கடமை உள்ளது என்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் அவர் அப்போது வலியுறுத்தியுள்ளார். 
 

click me!