நாளைய முதல்வரே..!100அடிக்கு பேனர் வைத்த தொண்டர்கள்..!பதறிப்போய் பேனரை எடுக்கச் சொன்ன ஓபிஎஸ்..!

By T BalamurukanFirst Published Oct 6, 2020, 8:42 AM IST
Highlights

    அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக தனது பண்ணைவீட்டில் முகாமிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.அவ்வப்போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவந்தார். இதனிடையே தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் நடமாடும் ரேஷன் கடையை திறக்க வைத்தார். கடனுதவி திட்டத்தையும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்று, பங்களா மேடு பகுதியில், அவரது ஆதரவாளர்கள் ‘நாளைய முதல்வரே… வருக வருக’ என புகழ்ந்து 100 அடி நீளத்திற்கு பேனர் அடித்தார். இதனை பார்த்த துணை முதல்வர் ஓபிஎஸ், உடனடியாக அந்த பேனரை அகற்றும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது ஆகவே பேனரை பொது இடங்களில் வைக்காதீர்கள் என்றும் ஓபிஎஸ் அறிவுரை வழங்கினார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. துணை முதல்வருக்கு பொது இடத்தில் பேனர் வைப்பது பிரச்னையா? அல்லது ‘நாளைய முதல்வரே’ என்ற வாசகத்துடன் கூடிய பேனர் வைத்தது பிரச்னையா என்பது தெரியவில்லை.
 
click me!