போராட்ட களமாகும் தமிழகம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம்

Asianet News Tamil  
Published : May 22, 2018, 04:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
போராட்ட களமாகும் தமிழகம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம்

சுருக்கம்

protest all over tamil nadu

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை ஒடுக்குவதற்காக இன்று துப்பாக்கி சூட்டில் காவல்துறை இறங்கியது இதில் 7 பேர் பலியாகிவுள்ளனர். 3 பேர்  நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் 65 பொதுமக்கள் தடியடியில் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் மக்கள் போராடட்த்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் கோயம்பேடு பகுதியில் மக்கள் அதிகார அமைப்பினர் போரட்ட்த்தில் ஈடுபட்டனர் ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடவேண்டும் என்றும் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்த முதல்வார் எடப்பாடி பழனிசாமியின் செயலை கண்டித்தும் அரசை பதவி விலக்க் கோரியும் போராட்டம் நட்த்தி வருகின்றனர்.

இடிந்தகரையில் 500க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சூட்டை கண்டித்து பேரணி நட்த்தினர் அப்போது வழியில் இருந்த டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள்.

சேலத்தில் இந்திய மாணவர் சங்கம்  தலைமையில் அரசாங்கத்தின் துப்பாக்கி சூட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்தை கையாள தெரியாத அரசு பதவி விலக வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.

சென்னையில் இயக்குநர் கவுதமன் பிரஸ் கிளப்க்கு எதிரே உருவபொம்மையை எதிர்த்து போரட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும் போராட்டம் அதிகரித்துள்ளது. அமைதியான முறையில் நடந்த மக்கள் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாத போது துப்பாக்கி சூட்டை ஏவியுள்ள அதிமுக அரசு மக்கள் நலனுக்கு எதிரானது எனப் பலரும் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்துவண்ணம் வருகின்றனர்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!