தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்களின் முழு விவரம்..!

By vinoth kumarFirst Published Nov 21, 2020, 6:36 PM IST
Highlights

ரூ. 61.843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

ரூ. 61.843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர்.  முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்த அமித்ஷா, பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

* கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கு அடிக்கல்

* ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

* திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா

* சென்னை வர்த்தக மையத்தை ரூ.309 கோடியில் விரிவுப்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

* இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

* காமராஜ் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

* கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

click me!