ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி ‘திடீர்’ கைது… டென்ஷனில் உ.பி…

By manimegalai aFirst Published Oct 4, 2021, 8:59 AM IST
Highlights

உத்தரப்பிரதேசத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு உள்ளார்.

லக்னோ:  உத்தரப்பிரதேசத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகளும் இத்தகைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது போராட்டத்தில் இருந்த விவசாயிகளும், அண்டை கிராம மக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க திகுனியாவில் குவிந்தனர். பாஜகவினர் அணிவகுப்பு அவ்வழியாக சென்ற போது அதில் வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 விவசாயிகள் பலியானாதால் ஆத்திரம் கொண்ட மக்கள் பாஜகவினரின் கார்களை அடித்து நொறுக்கினர்.

வன்முறை மொத்தம் 8 பேர் பலியாக உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந் நிலையில் லக்கிம்பூர் போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க காங். பொது செயலாளர் பிரியங்கா நேரில் சென்றார்.

அவரை லக்கிம்பூர் கிராம எல்லையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கிராம எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அவர் கைது செய்யப்பட்டுள்ள விவரம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரிய வந்துள்ளதால் அவாகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

click me!