கமல் கொளுத்திப் போட்ட நெருப்பு... ப்ரியங்கா காந்திக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழிசை..!

By Thiraviaraj RMFirst Published May 18, 2019, 10:37 AM IST
Highlights

எதிர்வினையாற்றியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ‘நேரு குடும்ப வாரிசுகளும் இத்தாலி அன்னையும் உங்கள் பெயருக்கு பின் காந்தி என சேர்த்து கொள்வது ஏன்? என தெளிவுபடுத்துங்கள்’’ என ப்ரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.  

நேரு குடும்ப வாரிசுகளும், இத்தாலி அன்னையும் உங்கள் பெயருக்கு பின் காந்தி என சேர்த்து கொள்வது ஏன்? என தெளிவுபடுத்துங்கள்' தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரியங்கா காந்திக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ எனத் தெரிவித்தது கடந்த 4 நாட்களாக இந்தியாமுழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது. பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் இது குறித்து பேசிய போது, கோட்சே எப்போதுமே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ நாட்டின் தேசத் தந்தையை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களை பிரதமர் மன்னிக்க கூடாது. அந்த கருத்து கூறியவர் மீது அவர் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாட்டின் பிரதமராகவும், அரசியல் தலைவராகவும் கோட்சே குறித்த நிலைப்பாட்டை நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதனை நீங்கள் தெளிவுபடுத்தப்படுத்த வேண்டும். அவரின் நிலைப்பாடு குறித்து எனக்கு தெரியவில்லை” எனக் கூறியிருந்தார். 

நேருகுடும்ப வாரிசுகளும் இத்தாலி அன்னையும் உங்கள் பெயருக்கு பின் காந்தி என சேர்த்து கொள்வது ஏன்? என தெளிவுபடுத்துங்கள் https://t.co/78tM0r8xzL

— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP)

 

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ‘நேரு குடும்ப வாரிசுகளும் இத்தாலி அன்னையும் உங்கள் பெயருக்கு பின் காந்தி என சேர்த்து கொள்வது ஏன்? என தெளிவுபடுத்துங்கள்’’ என ப்ரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.  

click me!