"என்னை சிக்க வைக்க எதிராளிகள் செய்யும் சதி".. பிரதமர் மோடி ட்வீட்.!

Published : Apr 08, 2020, 08:40 PM IST
"என்னை சிக்க வைக்க எதிராளிகள் செய்யும் சதி".. பிரதமர் மோடி ட்வீட்.!

சுருக்கம்

என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கையாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

 T.Balamurukan

என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கையாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தொடர்சியாகப் பதிவிட்டு வருகிறார்.

"பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இதை பார்க்கும்போது என்னைத் தகராறில் சிக்க வைக்க என்பெயரை பயன்படுத்தி சதி நடப்பதாகத் தெரிகிறது.

ஒருவேளை யாரவது என்மீது உள்ள அபிமானத்தில் கூட செய்திருக்கலாம். ஆனால் நான் வலியுறுத்துவது என்னவென்றால், உண்மையிலேயே என்மீது அன்பும், எனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் இருக்கும்வரை இதுபோல தேவை இருக்கும். இதைவிட எனக்கு பெரிய மரியாதை எதுவும் இல்லை.என்று அவர் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!