ஓய்வறியா மோடி..!! நாளை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகிறார்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2019, 3:27 PM IST
Highlights

நாட்களாக தொடர்ந்து ஓய்வில்லாமல் சீன அதிபர் மற்றும்  அதிகாரிகளுக்கு மாமல்லபுரம் சிற்பக் கலைகளைகள் மற்றும் இந்திய பாரம்பரியம் குறித்து  எடுத்துரைத்து, வரவேற்று, உபசரித்து மகிழ்ச்சியுடன் அவர்களை வழி அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து  அவரின் ஒய்வில்லாத உழைப்பை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் நாளையே அவர் ஈடுபட உள்ளார்.

சீனா அதிபர்  ஜி ஜின்பிங் கை சந்தித்த கையோடு நாளை மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்க உள்ளார் பிரதமர் மோடி, சதா  ஓய்வில்லாமல் சுற்றிச்சூழல மோடியால் மட்டுமே  சாத்தியம் என பாஜக தொண்டர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த சீனா அதிபர், ஜி ஜின்பிங்கை கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் வரவேற்று சந்தித்தார் மோடி,  சீனா-இந்தியா இடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து  இருநாட்டு தலைவர்களும்  பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்த மோடி இரண்டு நாட்களாக தொடர்ந்து ஓய்வில்லாமல் சீன அதிபர் மற்றும்  அதிகாரிகளுக்கு மாமல்லபுரம் சிற்பக் கலைகளைகள் மற்றும் இந்திய பாரம்பரியம் குறித்து  எடுத்துரைத்து, வரவேற்று, உபசரித்து மகிழ்ச்சியுடன் அவர்களை வழி அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து  அவரின் ஒய்வில்லாத உழைப்பை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் நாளையே அவர் ஈடுபட உள்ளார். வருகிற 26-ந் தேதி நடக்கிற  மஹாராஷ்டிர சட்ட மன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலில் சந்திக்கின்றனர். அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்  கூட்டணி அமைத்து எதரணியில்  போட்டியிடுகின்றனர். 

தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  அங்கு தலைவர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி  மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடி நாளை மகாராஷ்டிராவில், ஜல்கான் பகுதியிலிருந்த பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன்பின் சகோலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அவர், 16ஆம் தேதி அகோலா, பன்வெல், பர்தூர், ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் 17-ஆம் தேதி பார்லி, புனே, சதாரா ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டத்தில் உரையாடுகிறார்.

மகாராஷ்டிர தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்வது அம்மாநில மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக சுற்றுப் பயணத்தை முடித்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் சுற்றுச்சூழல உள்ள மோடியின் உழைப்பை கட்சி எல்லைத் தாண்டி பலர் பாராட்டி வருகின்றனர். 

click me!