பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு திடீர் உத்தரவு

Published : Nov 07, 2019, 10:56 AM IST
பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு திடீர் உத்தரவு

சுருக்கம்

நாட்டின் நல்லிணத்தை தொடர்ந்து பராமரிப்பது அனைவரின் பொறுப்பு அதனால தேவையில்லாமல் அயோத்தி விவகாரம் குறித்து பேசாதீங்க என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் பேசிய மோடி, நவம்பர் 17ம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகலாம். 

நாட்டின் நல்லிணக்கத்தை தொடர்ந்து பராமரிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு. அதனால் அயோத்தி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் யாரும் பேசாதீங்க என வலியுறுத்தினார். 

கடந்த அக்டோபர் 27ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது மனதிலிருந்து பேசுகிறேன் ரேடியோ நிகழ்ச்சியில், 2010ல் அயோத்தி நில உரிமை பிரச்னை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது, பிளவுகளை ஏற்படுத்த முயன்ற முயற்சிகளை அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எப்படி தடுத்தார்கள் என்பது குறித்து நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி தீர்ப்பு எப்படி வருமோ என்ற எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் உள்ளனர். அதேசமயம், தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அதனால் எந்தவித பிரச்னையும், அசம்பாதவிதங்களும் நடந்து விடக் கூடாது என்பதில் பல்வேறு தரப்பினரும் உறுதியாக உள்ளனர். மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!