ராமதாசின் ஒரே ஒரு ட்வீட்..! 3 அறிக்கை..! கமிஷ்னர் ஆபிஸ் புகார்..! நோட்டீஸ்..! தூக்கத்தை இழந்த ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Nov 7, 2019, 10:45 AM IST
Highlights

கடந்த மாதம் தூத்துக்குடியில் அசுரன் படம் பார்த்துவிட்டு அந்த படத்தை பாராட்டி ஒரு ட்வீட் செய்திருந்தார் மு.க.ஸ்டாலின். பஞ்சமி நில மீட்பு குறித்து அசுரன் சிறப்பான காட்சிகளை வைத்திருப்பதாக ஸ்டாலின் அந்த ட்வீட்டில் கூறியிருந்தார். இதனை ரீட்வீட் செய்த ராமதாஸ், அப்படி என்றால் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகத்தை ஸ்டாலின் காலி செய்வார் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

முரசொலி அலுவலகம் தொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்ட ஒரே ஒரு ட்வீட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிட்டத்தட்ட தூக்கத்தை இழந்து தவிப்பதாக கூறிச் சிரிக்கின்றனர் பாமகவினர்.

கடந்த மாதம் தூத்துக்குடியில் அசுரன் படம் பார்த்துவிட்டு அந்த படத்தை பாராட்டி ஒரு ட்வீட் செய்திருந்தார் மு.க.ஸ்டாலின். பஞ்சமி நில மீட்பு குறித்து அசுரன் சிறப்பான காட்சிகளை வைத்திருப்பதாக ஸ்டாலின் அந்த ட்வீட்டில் கூறியிருந்தார். இதனை ரீட்வீட் செய்த ராமதாஸ், அப்படி என்றால் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகத்தை ஸ்டாலின் காலி செய்வார் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

அப்போது தொடங்கியது ராமதாஸ் – ஸ்டாலின் மோதல். ஒரே ஒரு ட்வீட் போட்டுவிட்டு ராமதாஸ் ஒதுங்கிவிட்டார். ஆனால் அதற்கு ஸ்டாலின் மிக நீண்ட நெடிய விளக்கம் அளித்து ஒரு ட்வீட் செய்தார். இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் அளிக்க, அதற்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின்.

இந்த நிலையில் முரசொலி அலுவலக நிலப்பத்திரத்துடன் ஆஜராகுமாறு தமிழக அரசிடம் இருந்து திமுக தரப்புக்கு நோட்டீஸ் வந்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இந்த மூன்று அறிக்கைகளின் சாராம்சம் ஒன்று தான், முரசொலி பஞ்சமி நிலத்தில் இல்லை என்பது தான். ஆனால் ஸ்டாலின் இதையே திரும்ப திரும்ப சொல்வது ஏன் என்று கேட்டு சிரிக்கின்றனர் பாமகவினர்.

இதற்கிடையே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகத்தை காலி செய்ய வலியுறுத்தி நாக சேனை எனும் அமைப்பு முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி, கமிஷ்னர் அலுவலகத்தில் திமுகவின் ஆர்எஸ் பாரதி மனு அளித்துள்ளார். இப்படி அசுரன் படம் பார்த்துவிட்டு ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு ட்வீட் முரசொலி அலுவலக விவகாரத்தை விஸ்வரூபமாக்கியுள்ளது.

ஆனால் பிரச்சனையை ஆரம்பித்த ராமதாஸ் தற்போது அமைதியாகவிட, பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் தான் ஸ்டாலின் பதற்றத்தில் அறிக்கை மேல் அறிக்கை வெளியிடுவதாக சொல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், இந்த முரசொலி விஷயத்தில் திமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய விசிக கூட பாராமுகமாக இருந்து வருகிறது.

click me!