கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி..! பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் ஸ்டாலின்..!

Asianet News Tamil  
Published : Nov 06, 2017, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி..! பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் ஸ்டாலின்..!

சுருக்கம்

prime minister modi met dmk leader karunanidhi in his house

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.

தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

வயது முதிர்ச்சி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த பிரதமர் மோடி அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

கோபாலபுரம் வீட்டிற்கு வந்த பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

சுமார் 10 நிமிடங்கள் கருணாநிதியின் இல்லத்தில் பிரதமர் மோடி இருந்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்த கேட்டறிந்ததாகவும் மரியாதை நிமித்தமான சந்திப்பே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

PREV
click me!

Recommended Stories

TN Election: 85% வாக்குப்பதிவு.! திமுகவை அதிரவைக்கும் வரலாறு காணாத எழுச்சி! கோட்டை யாருக்கு?
தவெக வாக்கு மாறியது - த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு! தேர்தல் கலாட்டாஸ் ஒரு பார்வை!