நீண்ட காலம் பதவியில் இருந்த 4 வது பிரதமர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி.!!

By T BalamurukanFirst Published Aug 14, 2020, 9:40 AM IST
Highlights

இந்தியாவின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்கள் பட்டியலில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த நிலையை நரேந்திரமோடி எட்டிள்ளார்.
 

இந்தியாவின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்கள் பட்டியலில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த நிலையை நரேந்திரமோடி எட்டிள்ளார்.

அதே சமயத்தில், இதற்கு முன்னர் நான்காவது இடத்திலிருந்த அடல் பிகாரி வாஜ்பேயியை விஞ்சியதன் மூலம், நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெற்றிருக்கிறார் மோடி.

2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி நாட்டின் 14-வது பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திரமோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். மன்மோகன் சிங் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

நாளை நாட்டின் 74-வது சுதந்திர நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நீண்ட காலம் பதவியிலிருந்த நான்காவது பிரதமர் என்ற தகுதியைப் பெறுகிறார் மோடி"என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

click me!