பழி தீர்த்த பாஜக; டிரெண்டிங்கில் பிரதமர் மோடியை முந்துவாரா ஸ்டாலின்! 

Asianet News Tamil  
Published : Jul 17, 2018, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
பழி தீர்த்த பாஜக; டிரெண்டிங்கில் பிரதமர் மோடியை முந்துவாரா ஸ்டாலின்! 

சுருக்கம்

Prime Minister Modi in Trending rating Stalin

லண்டன் சென்று சென்னை திரும்ப உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினை எதிர்க்கும் வகையில் #GoBackStalin என்ற ஹாஷ்டேக்  ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi ஹேஷ்டேக் உலக அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அதேபோல் பாஜக தலைவர் அமித்ஷா வருகை தந்தபோது #GobackAmitshah டிரெண்டானது. 

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி இரவு தனது மனைவி உடன் லண்டன் சென்றார். லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் இன்று சென்னை திரும்புகிறார். இந்நிலையில் ட்விட்டரில் இன்று காலை முதல் #GoBackStalin என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதேவேளையில் ஸ்டாலின் லண்டனில் இருந்து திரும்புவதை வரவேற்றும் வீதமாக #WelcomeStalin என்ற ஹாஷ்டேக்  ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

இதற்கு பல்வேறு காரணங்கள் முவைத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அதிமுகவிற்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை உட்பட பல்வேறு காரணங்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த இரண்டும் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெக வரலாறு படைக்கும்.. விஜய் தான் அடுத்த சி.எம்! செங்கோட்டையன் சூளுரை!
ராமதாஸ் கூட்டணியா..? தெறித்து ஓடும் விஜய்.. தவெகவிலும் அடைக்கப்பட்ட கதவு..!