பிரதமர் பேசியது ஒருத்தருக்கும் புரியல, மீண்டும் ஒரு முறை போடுங்க சார்...!! ஒன்ஸ் மோர் கேட்ட ஆசிரியர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2020, 1:57 PM IST
Highlights

மாண்புமிகு பிரதமர் பேசி முடித்தப் பிறகு அவரின் உரையினை ஆங்கிலத்திலோ அல்லது அந்தந்த மாநிலமொழியில் மொழிப்பெயர்த்து வழங்கியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். 

ஜனவரி 20 ந்தேதி மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினார். மாணவர்களிடையே உரையாடல் என்பது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்று மகிழ்கின்றது.  அதேவேளையில் மாண்புமிகு பாரதபிரதமரின் உரையினை கேட்க மாணவர்களோடு நாங்களும் திரையின் முன் ஆர்வத்தோடு காத்திருந்தோம்.  ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே அளித்தது. 

காரணம் பிரதமர் அவர்கள் இந்தி மொழியில் பேசியதால் இந்தித் தெரியாத மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். பாரதப் பிரதமரின் உரையைக் கேட்க முடிந்ததே தவிர என்ன பேசினார் என்பதை இறுதிவரை உணரமுடியவில்லை.   மாண்புமிகு பிரதமர் பேசி முடித்தப் பிறகு அவரின் உரையினை ஆங்கிலத்திலோ அல்லது அந்தந்த மாநிலமொழியில் மொழிப்பெயர்த்து வழங்கியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். 

உரையின் நோக்கம் அனைத்துத்தரப்பு மாணவர்களிடமும் போய் சேர்ந்திருக்கும். மீண்டும் வாய்ப்பிருந்தால் பாரதப்பிரதமரின் உரையினை மறு ஒளிபரப்பு செய்தும் தேவையான மாநிலங்களில் ஆங்கிலத்திலோ அல்லது பிராந்திய மொழிகளிலோ மொழிப்பெயர்த்து வழங்கிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

click me!