தமிழகத்தில் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. பாஜக அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2021, 4:29 PM IST
Highlights

இந்த திட்டம் சுமார் 3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளதாகும். இதேபோல கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் திருப்பூர்,வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜக்கூர் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள், திருச்சி இருங்கூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள் ஆகியவற்றின் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்திற்கு 12,400 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை கேவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது, தற்போது தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரதப் பிரதமர் மோடி தமிழகத்திற்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை சென்னை வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து உரை நிகழ்த்தினார். 

பின்னர் அக்கூட்டத்தை நிறைவு செய்து  கோவைக்கு வருகை தந்தார். இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் தமிழகத்திற்கு சுமார் 12,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு  திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார். அது 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் ஆகும். அதில் இரண்டு மின் உற்பத்தி அலகுகளில் தலா 500 மெகாவாட் திறன் கொண்டவை ஆகும்.  இதில் சுமார் 8000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2670 ஏக்கர்  பரப்பளவில் அமைக்கப்பட்ட என்எல்சிஐஎல்   நிறுவனத்தில் 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இந்த திட்டம் சுமார் 3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளதாகும். இதேபோல கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல்,  பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் திருப்பூர், வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜக்கூர் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள், திருச்சி இருங்கூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள் ஆகியவற்றின் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் கோவை மதுரை தூத்துக்குடி உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒன்றிணைந்த கட்டமைப்பு மையங்களை அமைப்பதற்கும், பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதை அடுத்து  மாலை 5 மணி அளவில் கொடிசியா அரங்கிற்கு அருகில் உள்ள மைதானத்தில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்ற உள்ளார். அதை முடித்துக் கொண்டு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார் இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

click me!