எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் அன்பின் பெட்டகம் மோடி.. பிரதமர் மீது உருகிய ஓபிஎஸ்.

Published : Feb 25, 2021, 04:19 PM ISTUpdated : Feb 25, 2021, 04:39 PM IST
எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் அன்பின் பெட்டகம் மோடி.. பிரதமர் மீது உருகிய ஓபிஎஸ்.

சுருக்கம்

முன்னதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார் அப்போது பேசிய அவர் எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் அன்பின் பெட்டகம் பிரதமர் மோடி என்றும், புதுமையை செயல் வடிவம் கொடுத்து, தமிழர் மீது தனி அன்பு கொண்டவர் பிரதமர் மோடி எனவும் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு புகழாரம் சூட்டினார்.    

எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் அன்பின் பெட்டகம் பிரதமர் மோடி என்றும்,  புதுமையை செயல் வடிவம் கொடுத்து, தமிழர் மீது தனி அன்பு கொண்டவர் பிரதமர் மோடி எனவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு புகழாரம் சூட்டினார்.  கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது அதற்கான ஏற்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது,தற்போது தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரதப் பிரதமர் மோடி தமிழகத்திற்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை சென்னை வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து உரை நிகழ்த்தினார். 

பின்னர் அக்கூட்டத்தை நிறைவு செய்து  கோவைக்கு வருகை தந்தார். இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் தமிழகத்திற்கு சுமார் 12,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு  திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்காக கொடிசியா அரங்கிற்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அதை தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவிமரியாதை செலுத்தினார். 

முன்னதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார் அப்போது பேசிய அவர் எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் அன்பின் பெட்டகம் பிரதமர் மோடி என்றும்,  புதுமையை செயல் வடிவம் கொடுத்து, தமிழர் மீது தனி அன்பு கொண்டவர் பிரதமர் மோடி எனவும் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு புகழாரம் சூட்டினார்.  
 

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு