மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவு..!! ஆறுதலடைந்த பிரதமர் மோடி...!!

By Ezhilarasan BabuFirst Published Jun 16, 2020, 4:49 PM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா சிறப்பாக நடத்தி வருகிறது என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி, 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் செவ்வாய்க் கிழமை உரையாற்றினார். 

கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா சிறப்பாக நடத்தி வருகிறது என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி, 21 மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் செவ்வாய்க் கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா சிறப்பாக நடத்தி வருகிறது. உலகச் சுகாதார நிறுவனமே இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி உள்ளது. ஒட்டுமொத்த பெரிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்,  கொரோனாவால் குணமடைந்தவரின் விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 

அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இந்த அளவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது சாதாரண விஷயமல்ல, ஊரடங்கு நடைமுறைகளுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட தொடங்கியுள்ளன. இந்த வருடம் நாட்டில் உரம் விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றினால் கொரோனாவை தோற்கடிக்க முடியும், மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று மக்கள் யோசிக்கக்கூட கூடாது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்தியாவுக்கான வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், விவசாயிகளின் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா என்ற முழக்கத்துடன் ஒன்றிணைந்தால் தற்சார்பு இந்தியாவை விரைவில் அடைய முடியும். 

ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றினால் நிச்சயம் கொரோனாவை நம்மால் தோற்கடிக்க முடியும், அதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்தை மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில் ஒரு சிலர் அலட்சியம் காட்டினால் கூட கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமடைய கூடும் என எச்சரித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், கொரோனா பெருந்தொற்றாக  உருவெடுக்கும் முன்னரே இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் மூலமாக பெருந்தொற்று பெரிய அளவிற்கு  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பணவீக்கம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் இல்லை, ஏற்றுமதியும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

 

click me!