ஸ்டாலின் அழைப்பு ஏற்று தமிழகம் வர ஒப்புக்கொண்ட குடியரசுத் தலைவர்..! திடீரென வர மறுத்த காரணம் என்ன.?

By vinoth kumar  |  First Published May 24, 2023, 1:07 PM IST

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிநி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 


சென்னை கிண்டியில் ஜூன் 5ம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிநி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 28ம் தேதி டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார். 

Latest Videos

முதல்வர் ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5ம் தேதி மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் ஜூன் 5ம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

click me!