அதிமுகவை குஷிப்படுத்திய பிரேமலதாவின் அறிவிப்பு... உதயநிதிக்கு குட்டு..!

By Thiraviaraj RMFirst Published Jan 11, 2021, 5:43 PM IST
Highlights

வரும் தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடும் எனவும் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் எனவும் பிரேமலதா கூறியுள்ளார்.

வரும் தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடும் எனவும் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் எனவும் பிரேமலதா கூறியுள்ளார்.
 
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றால் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உறுதியளிக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாமக, பாஜக கட்சிகள் தங்களது பராக்கிரமத்தை அதிமுகவுக்கு எதிராக செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தற்போது வரை அதிமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளோம் என கூறும் பிரேமலதா விஜயகாந்த், வரும் தேர்தலில் கூட்டணி நிலைப்பாட்டை தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வர் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேமுதிக தனித்து நிர்ப்பதையே தொண்டர்கள் விரும்புகின்றனர் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரேமலதா, அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என அடிக்கடி தெரிவித்து வருவது அதிமுகவுக்கு ஆறுதல் கொடுத்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் அருள்புரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தேமுதிகவில் இணையும் விழா நடைபெற்றது.

கட்சியில் இணைந்தவர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ''கட்சியின், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டி, நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பின்னர் கூட்டணி குறித்த விஜயகாந்த் அறிவிப்பார். அதிமுகவை பொறுத்தவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேமுதிக பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடும். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை தவறாக பேசியிருந்தால் இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும்'' என தெரிவித்தார். 

click me!