அதிமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கருத்து..!! செய்தியாளர்களின் கேள்விக்கு நெத்தியடி பதில்.

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2020, 3:47 PM IST
Highlights

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது கூட்டணிக் கட்சிகள் வருத்தத்தில் இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து பேசிய அவர், தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும்,

தற்போது வரை பாஜக-அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு பிறகாக அறிவிக்கப்படும் எனவும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

சென்னை புறநகர் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் உள்ள 5000 மேற்பட்ட சுனாமி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் மூன்றாவது நாளாக சூழ்ந்திருப்பதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 

தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால் உடைமைகள் சேதாரமாகி உள்ளன. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி முழுவதுமாக வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்குக் கூட வழியில்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் செம்மஞ்சேரியில் வெள்ளநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் மக்களை சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அச்ந்திப்புக்குப்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, இருப்பினும் தாழ்வான பகுதியாக உள்ள இந்த செம்மஞ்சேரியில் மழை பெய்தால்  நீர் சூழும்சூழல் இருப்பதால்  இதனை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரினார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது கூட்டணிக் கட்சிகள் வருத்தத்தில் இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து பேசிய அவர், தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய பொதுக்குழுவுக்கு பிறகாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 
 

click me!