வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்து விட்டு மீடூ புகாரளிப்பது ஏற்கக்கூடியது அல்ல...! புட்டு புட்டு வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்!

Published : Oct 26, 2018, 03:54 PM IST
வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்து விட்டு மீடூ புகாரளிப்பது ஏற்கக்கூடியது அல்ல...! புட்டு புட்டு வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்!

சுருக்கம்

#MeToo இயக்கம் இந்திய அளவில் பெரும் சூடு பிடித்துள்ளது, இதில்  பெரிய பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரையிலும், எங்கோ அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களும் தாங்கள்... ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சிலரால் எவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோம் என மீடூ என பதிவிட்டு, வெளியுலகிற்கு தைரியமாக சொல்ல துணிந்துள்ளனர்.

மேலும் இது குறித்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் முதல், பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளங்கள் மற்றும் பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், தேமுதிக கட்சியின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள, நடிகை விஜயத்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மீடூ சர்ச்சை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 

அப்போது பேசிய இவர் மீடூ  தற்போது மிகப்பிரபலமாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை கொடுத்து வருவதால்... இந்த இயக்கத்தை பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது'' என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் எப்போதும் அவர்கள் தைரியமாக இருந்தால் அவர்களை யாராலும் எதுவும் செய்யமுடியாது ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். இதனால் பெண்கள் சரியாக இருக்க வேண்டும்''  என தன்னுடைய கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளவாசிகள் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மீடூ குறித்து இவர் கூறியுள்ளது... பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட் செய்து விட்டு, காலம் கடந்து தற்போது மீடூ வில் புகார் அளிப்பது ஏற்க கூடியது இல்லை என கூறியுள்ளார். வெளிப்படையாக இவர் தன்னுடைய மனதில் உள்ள கருத்துக்களை புட்டு புட்டு வைத்து வருவது சினிமா வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!