மேக்கப் இல்ல, டல்லான குரல்... களையிழந்த முகம்... தொண்டர்களை அழவைத்த அண்ணியார் ...

By sathish kFirst Published Jun 22, 2019, 12:02 PM IST
Highlights

எப்போதுமே பிரஸ் மீட் என்றால், பக்கா மேக்கப்பில், மங்களகரமாக காட்சியளிக்கும் பிரேமலதா நேற்று நடந்த பிரஸ்மீட்டில் சர்வ சாதாரணமாக , சோகமாகவும் பேசிவிட்டு சென்றுள்ளார். 
 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, அங்குள்ள இடம், ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்திற்கு வந்துள்ளன. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த  சொத்துகள் வரும் ஜூலை 26ம் தேதி ஏலம் விடப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், கல்லூரியின் மேம்பாட்டிற்காக வாங்கப்பட்ட 5  கல்லூரியின் மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி அளவில் கடன் பெறப்பட்டது. இந்த கடனுக்கான வட்டித் தொகை முறையாக செலுத்தப்பட்டது. இருப்பினும், தற்போதைக்கு கடன் தொகையை செலுத்த முடியவில்லை. கல்லூரியில் விடுமுறை முடிந்து மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

கடன் தொகையை செலுத்த 2 மாதம் அவகாசம் கோரப்பட்டது. ஆனால், வங்கி நிா்வாகிகள் அவகாசம் வழங்கவில்லை. எங்களுக்கு வேறு வழியில் வருமானம் வருவதில்லை. சட்டத்தின் அடிப்படையில் கூடிய விரைவில் கடன் நிலுவைத் தொகையை செலுத்தி விடுவோம். 5 கோடி என்பது எங்களுக்கு பெரிய பிரச்சினை கிடையாது. இருப்பினும், தேமுதிக என்பதால் இந்த விவகாரம் அதிகம் விவாதிக்கப்படுகிறது என்று தொிவித்தாா். தர்மருக்கே சோதனை வந்ததாகவும், நேர்மையானவர்களையே கடவுள் சோதிப்பார் என்றும், ஆனால் கைவிடமாட்டார் என்றும் பிரேமலதா கூறினார். 

வழக்கமாக செய்தியாளர் சந்திப்பு என்றால் பக்கா மேக்கப்போடு, மங்காகரமாக பயங்கர சுறுசுறுப்பாக காட்சியளிக்கும் பிரேமலதா, நேற்று நடந்த இந்த பிரஸ் மீட்டில், சரியாக  தலை கூட சரியாக சீவாமல், சாதாரண பச்சைக்கலர் புடவையில் சோகமாக வந்து நின்றார். எப்போதுமே செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கே உரிய ஸ்டைலில் தெறிக்கவிடும் அவர், நேற்று டல்லான குரல், களையிழந்த முகம் என சோகமாக காணப்பட்டார்.

ஒரு கட்சியின் தலைவரின் தாய் தந்தை பெயரில் தொடங்கப்பட்ட கல்லூரி இப்படி ஏலத்திற்கு வருகிறதே, இது தங்கள் கட்சிக்கும் கேப்டனுக்கும் எவ்வளவு பெரிய அசிங்கம் என பிரேமலதா மட்டுமல்ல தேமுதிக தொண்டர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

click me!