தேரோட்டம் விவகாரத்தில் முன்னெச்சரிக்கை தேவை... ராமதாஸ் வலியுறுத்தல்!!

Published : Apr 27, 2022, 06:35 PM IST
தேரோட்டம் விவகாரத்தில் முன்னெச்சரிக்கை தேவை... ராமதாஸ் வலியுறுத்தல்!!

சுருக்கம்

தஞ்சை தேரோட்டத்தில் 11 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தஞ்சை தேரோட்டத்தில் 11 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினத்தில் இங்கே விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. இதை அடுத்து அங்கு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் நின்ற இடத்துக்கு மேற் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பி சென்றுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதி உயர் மின் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சை தேரோட்டத்தில் 11 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில்  நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்ற தேர் ஊர்வலத்தின் போது, மின்சாரக் கம்பிகள் மீது தேர் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள். 15 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அப்பரின் பிறந்த நாளான சதய நட்சத்திர நாளில் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 94 ஆண்டுகளில் எந்த விபத்தும் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடந்த விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சோகம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. தேர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 பேரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளித்து  உடல் நலம் பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில்  இத்தகைய விபத்துகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், உள்ளூர் நிர்வாகமும், விழாக்குழுவினரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!
EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?! மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை" என பறக்கும் மீம்ஸ்.!