
முதல்வ்பர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம், அவர் பூரண உடல் நலத்துடன் உள்ளார் என அப்போலோ குழும் தலைவர் டாக்டர் பிரதாப்சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அப்போலோ குழும நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் முதல்வர் பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவர் நல்ல நினைவாற்றலுடன் பூரண உடல் நலத்துடன் உள்ளார்.
அவருக்கு இருந்த நுறையீரல் தொற்று முழுமையாக குணமாகி விட்டது. சாதாரண உடல்நிலைக்கு வந்துவிட்ட அவருடன் நான் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவருக்கு டிஸ்சார்ஜ்ன் ஆவது குறித்து, வேலைகளில் ஈடுபடுவது குறித்து நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் , ஆனால் அவர் வீடு திரும்பும் அளவு பூரண நலத்துடன் இருக்கிறார் என பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.