அடேங்கப்பா.. காங்கிரஸ் பவர் கூடுதே..! பவர் ஸ்டார் இணைஞ்சுட்டாரு..!

By manimegalai aFirst Published Feb 27, 2022, 3:21 PM IST
Highlights


சினிமா உலகில் தனக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸை பப்ளிசிட்டியாக மாற்றி பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.சிறிது நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்த பவருக்கு முன்பிருந்ததைப் போல சினிமா உலகில் வாய்ப்புகள் இல்லை. எனவே அரசியல் பக்கம் என்ட்ரி கொடுத்தார். வந்தாரை எல்லாம் வாரி இணைக்கும் பாஜக பவரையும் இணைத்துக் கொண்டது. கட்சியில் இணைந்தாரே தவிர கட்சி தொடர்பான எந்த பாஜக மீட்டிங்கிலும் பவரை காண்பது கடினம். இந்த நிலையில்  தான்  பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் சீனிவாசன்..

லத்திகா என்ற படத்தின் மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
லத்திகா படத்தை 200 நாட்கள் தியேட்டரில் ஓட்டி சாதனை படைத்தார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம்  பவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதனையடுத்து பல்வேறு தயாரிப்பாளர்கள் பவர் ஸ்டார் சீனிவாசனை தேட ஆரம்பித்தனர்.இதனையடுத்து  கோலிசோடா, மெர்லின், என்ன தவம் செய்தாயோ,ஓடு ராஜா ஓடு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.இதில் பெரும்பாலான படங்கள் ஓடாத காரணத்தால் பாஜகவில் கடந்த 2016ஆம் ஆண்டு அடைக்களம் தேடிக்கொண்டார். அங்கு சிறிது காலம், காலம் தள்ளியவர் திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்து  நடிகை வனிதா விஜயகுமாருடன்  ஜோடியாக பிக்கப் டிராப் என்ற  படத்தை  இயக்கி நடித்து வந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானநிலையில்  உடல் நலத்துடன் வீடு திரும்பியதாகவும் வீடியோ  வெளியிட்டு இருந்தார்.

 
பாஜகவில் என்ன செய்தார் என்று தெரியாத நிலையில் திடீரென தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை மாநில தலைவர் கனகராஜ் முன்னிலையில் இணைந்துள்ளார். இணைந்த உடன் பவருக்கு பவர் சேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் சட்டத்துறையில் தமிழக கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், பாஜகவில் பொறுப்பு தருகிறேன் என தன்னை அழைத்து சென்றதாகவும் ஆனால் கடைசி வரை பொறுப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். பாஜகவில் தனக்கு அங்கீகாரமும் தரவில்லை, மரியாதையும் தரவில்லையென வேதனையோடு தெரிவித்தார். காங்கிரசில் இணைய வேண்டும் என தன் மனதில் தோன்றிய நிலையில் தற்போது இணைந்து விட்டதாக கூறினார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட இருப்பதாகவும்  தெரிவித்தார்.

திரைபிரபலங்கள் ஒரு கட்சியில் இணைவதாக இருந்தால் அந்த கட்சியில் தலைவர்களை சந்தித்து இணைவது தான் வாடிக்கையாக இருக்கும்.  ஆனால்  காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமை சட்டத்துறை தலைவர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. கட்சியில் இணைந்தவுடன் ரெடிமேடாக பதவியும் கொடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியில் தான். காங்கிரஸ்  கட்சியில் பல காலங்களாக பல கோஷ்டிகள் உள்ள நிலையில் பவரின் புதிய வரவு காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பவர் கிடைக்குமா அல்லது பவர் பிடுங்கப்படுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 


 

click me!