முதல்வர் ஸ்டாலின் குறித்து ஆபாச பதிவு.. அதிமுக பிரமுகரை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

Published : Jul 29, 2021, 12:43 PM IST
முதல்வர் ஸ்டாலின் குறித்து ஆபாச பதிவு.. அதிமுக பிரமுகரை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

சுருக்கம்

முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்ட அருப்புக்கோட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்ட அருப்புக்கோட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மகாமூர்த்தி மகன் தென்னரசு என்பவர் அதிமுக ஒன்றிய விவசாய அணி செயலாளராக உள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக பற்றியும், முதலமைச்சர் குறித்தும் ஆபாசமாக பதிவு செய்ததாக ஏராளமான புகார்கள் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு வந்துள்ளது. 

மேலும், புலிக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன் திருச்சுழி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசுவை கைது செய்தனர். மேலும், தென்னரசு பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து அவரது பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். தென்னரசுவின் தந்தை மகாமூர்த்தி அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

சபதமும் சாதனையும்: 1991 தேர்தலில் ஜெயலலிதா தமிழக முதல்வரான த்ரில்லர் கதை.! அவமானத்தில் தொடங்கி ஆட்சியை கைப்பற்றியது வரை.!
'ஸ்டாலினை நம்பினால் மீண்டும் திகார் சிறைதான்' - கனிமொழியை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி