அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

Published : Jul 29, 2021, 12:41 PM IST
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

சுருக்கம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.   29.07.2021 அன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக தமிழ்நாட்டில் 29.07.2021, 30.07.2021: பெரும்பாலும் வறண்ட வானிலையும், கோயமுத்தூர், நீலகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 31.07.2021: கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும். எனவும் 01.08.2021,02.08.2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள்,கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.   29.07.2021 அன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

29.07.2021,30.07.2021: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்படுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!
போடியில் ஓ.பி.எஸை பொடிப்பொடியாக்க ஸ்கெட்ச்..! அதிமுகவின் 'மிஸ்ரா' அஸ்திரம் - தேனியில் அதிரும் அரசியல் களம்!