பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை !! ஜார்கண்ட் அரசு அதிரடி!!

By Selvanayagam PFirst Published Feb 13, 2019, 7:04 AM IST
Highlights

பயங்கரவாத  அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி  பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஜார்கண்ட் மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

கேரளாவில் தொடங்கப்பட்ட   பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பானது முஸ்லிம் அடிப்படைவாத  அமைப்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஒரு சிலர் தென் இந்தியாவில் இருந்து சிரியாவிற்கு சென்று வந்துள்ளது சிறப்பு புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதையடுத்து  ஜார்கண்ட் மாநில அரசு   பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளது. இந்திய குற்றவியல் சட்ட திருத்த விதி 1908இன் படி தடைவிதிக்கப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான்    பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அதன் தொடக்க விழாவை நடத்தியது.  ஜார்கண்டின் பகூர் மாவட்டத்தில் அந்த அமைப்பின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்ததன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மமாநில அரசு தெரிவித்துள்ளது.


அதே நேரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அமைப்புக்கு அம்மாநில அரசால் தடை விதிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது

இதே போல கேரளாவிலும் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அண்மையில் நடந்த மாநில டிஜிபிக்கள் மாநாட்டில் கேரள டிஜிபி சுட்டிக்காட்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டுள்ளார்.

click me!