ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிப்பு: டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை என புள்ளியல் அமைப்பு தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2020, 10:51 AM IST
Highlights

தலைநகர் டெல்லியில் 55 சதவிகித வீடுகளில் இணைய இணைப்பு வசதி இருப்பது தான் இருப்பதிலேயே அதிக பட்சம், அதற்கு அடுத்தபடியாக இமாச்சல், கேரளா ஆகிய மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் சற்று கூடுதலாக வீடுகளில் இணைய இணைப்பு வசதி உள்ளது

நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பள்ளிகள் மூடிக் கிடக்கும் நிலையில் மாணவர்களுக்கு தற்போது ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் வழியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் வசதி இல்லாத ஏழை மாணவர்கள் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பான விவாதங்கள் தற்போது முன்னுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நாட்டில் பல்வேறு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு இடையே ஆன்லைன் வகுப்புகளால் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அமைப்பு கூறியுள்ளது. 

இந்த டிஜிட்டல்  இடைவெளி பெரிய அளவில் ஏழை மாணவர்களின் கல்வியில், பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அது கவலை தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் நகர்ப்பகுதிகளில் இன்டர்நெட் இணைப்பு 70 சதவீதத்திற்கு மேல் உள்ளது. ஒடிசாவில் 6 சதவீதத்துக்கும் கீழேதான் டிஜிட்டல் வசதி உள்ளது. இந்தியா முழுவதும் 10 வீடுகளுக்கு ஒரு வீடு என்ற அளவிலேயே கணினி உள்ளது. அவர்களிலும் 25 பேருக்கு மட்டுமே இன்டர்நெட் வசதி உள்ளது. கிராமப்புறங்களில் 15 சதவிகிதம் மக்களிடம் தான் இன்டர்நெட் உள்ளது. 

தலைநகர் டெல்லியில் 55 சதவிகித வீடுகளில் இணைய இணைப்பு வசதி இருப்பது தான் இருப்பதிலேயே அதிக பட்சம், அதற்கு அடுத்தபடியாக இமாச்சல், கேரளா ஆகிய மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் சற்று கூடுதலாக வீடுகளில் இணைய இணைப்பு வசதி உள்ளது. மாறாக ஒடிசாவில் 10 வீடுகளுக்கு ஒரு வீட்டில் தான் இணைய இணைப்பு உள்ளது. கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் கூட 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இன்டர்நெட் இணைப்பு உள்ளது என்று  புள்ளியல் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

 

click me!