"மத்திய அரசுக்கு எதிராக கல் வீசும் ஸ்டாலின் எண்ணம் ஈடேறாது" சிரிக்காமல் ஜோக் அடித்த பொன்னார்...

 
Published : Apr 29, 2017, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
"மத்திய அரசுக்கு எதிராக கல் வீசும் ஸ்டாலின் எண்ணம் ஈடேறாது" சிரிக்காமல் ஜோக் அடித்த பொன்னார்...

சுருக்கம்

Pon.Radhakrishnan Comments Against MK Stalin

தி.மு.க.வின் செயல்தலைவர் ஸ்டாலினுக்கும், பா.ஜ.க. மத்திய அமைச்சர் பொன்னாருக்கும் இடையில் வெடித்துள்ள கருத்து மோதல்தான் இன்றைய தமிழக அரசியலில் ஆன் கோயின் ஹாட்டஸ் மேட்டர்.

மத்திய அரசு வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. ஆகிய துறைகளை வைத்துக் கொண்டு அவற்றை தன் வசதிக்கு ஏற்ப ஏவிவிட்டு தமிழகத்தில் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைத்து வருகிறது என்று ஸ்டாலின் சாடியிருந்தார். 

இதற்கு பதிலடியாக பேசியிருக்கும் பொன்னார் ‘’டெல்லியில் போராட்டம் நடத்தும்படி விவசாயிகளை  சதிச்செயல் செய்து தூண்டிவிட்டது தி.மு.க.தான். மத்திய அரசுக்கு எதிராக கல் வீசும் அவர்களின் எண்ணம் எதுவும் ஈடேறாது. தி.மு.க.வால் இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே முடியாது.’ என்றார். 

பரவாயில்லையே பொன்னார் உடனடியா செம ஹாட்டா பதில் கொடுக்கிறாரே! பரபர அரசியல் வித்தையின் பாலபாடத்தில் பா.ஜ.க.வுக்கும் பாஸாகிடுச்சு என்று சிலாகித்தனர் அரசியல் விமர்சகர்கள். 

ஆனால் அடுத்த நொடியே ‘தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கான காலம்தான் உருவாகியிருக்கிறது. மக்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். தமிழகத்தில் தாமரையின் ஆட்சி மலரும்.” என்று அடுத்தடுத்து அதீத நம்பிக்கை காட்டி பேசி சென்றார். 

இதற்கு ‘சிரிக்காம ஜோக் அடிக்க பொன்னாரால் மட்டும்தான்யா முடியும். உட்கட்சி மோதல் பஞ்சாயத்து தமிழக பா.ஜ.க.வை புரட்டியெடுக்குது. தமிழிசைக்கு சென்னையில் ஆதரவுன்னா, வானதி கோவிச்சுட்டு கோயமுத்தூர் போறாங்க.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திருப்பூர்ல கூட்டம் கூடினா பொன்னாரு சுசீந்திரம் கிளம்பிடுறார். மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரை சொந்த மாவட்டமான கோவையிலேயே வளர விடாமல் வெச்சு செய்யுது பொது செயலாளர் செல்வக்குமார் தரப்பு.

ஹெச்.ராஜாவை தமிழக பா.ஜ.க.வில் யாருக்குமே ஆகுறதில்லை. சுப்பிரமணியசாமிக பா.ஜ.க.வில் இருந்தாலும் கூட அவருக்கு அந்த கட்சியே ஆகுறதில்லை.

சூழல் இப்படியிருக்கிறப்ப பொன்னார் எந்த தைரியத்துலதான் இப்டியெல்லாம் பேசுறார்? முதல்ல கட்சிக்குள்ளே ஒற்றுமையை உருவாக்குங்க அப்புறம் ஆட்சியை பற்றி பேசலாம்.” என்று இணையத்தில் வறுத்திருக்கின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்