"ஜெ மரணம் - பொன்.ராதா பரபர பேட்டி" - " பதற்றத்தில் ஓ.பி.எஸ்., எடப்பாடி "

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 08:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"ஜெ மரணம் - பொன்.ராதா பரபர பேட்டி" -  " பதற்றத்தில் ஓ.பி.எஸ்., எடப்பாடி "

சுருக்கம்

Union Minister Pon.radhakrishnan Ask Investigation Commision About Jayalalitha case

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை போக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் தங்கியள்ளார்.

இந்தச் சூழலில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை போக்க வேண்டும் என்றார்.

உடல் நலக்குறைவால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி அகற்றப்பட்டதைப் பற்றி மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ ஏன்  விசாரணை கமிஷனை அமைக்கவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் பரபர கேள்விகளை எழுப்பியுள்ளாரா்.

பொன்னாரின் இக்கேள்விகளுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ்.சும். இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!