
தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுக உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் தனபால் இடையே நடந்த மோதல்கள், மற்றும் திமுக உறுப்பினர்களை குண்டு கட்டாக வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, வாக்கெடுப்பு நடத்தியது என அனைத்து நிகழ்வுகளும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இப்பிரச்சனை குறித்து துத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்கள் நடந்து கொண்டவிதம் எற்புடையதல்ல என தெரிவித்தார்.
இதேபோன்று சபாநாயகர் தனபால், சாதி குறித்து பேசியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
நீட் தேர்வு மாணவர்களின் முன்னேற்றத்துக்காக கொண்டு வரப்பட்டது என்றும் அது குறித்து தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.