
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி இல்லை என தெரிவித்தார்.
நதிகளை இணைக்க முடியாது என சொன்னவர்தான் ராகுல் காந்தி என்றும் அவரால் எப்படி விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினாலே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என பொன்னார் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் அந்தியில் எழுதப்படுவதற்கு காரணம் திமுக வும், காங்கிரசும் தான் என குற்றம்சாட்டிய பொன்னார், அவர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார்.