சி.வி.சண்முகம் தங்கை மகன் தற்கொலை !! அமைச்சரிடம் சோகத்தை பகிர்ந்து கொண்ட பொன்முடி !

By Selvanayagam PFirst Published Oct 7, 2019, 7:49 PM IST
Highlights

விழுப்புரம் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் திடீரென தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டுக்கு நேரில் சென்ற முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் அவரிடம் தங்கள் சோகத்தை பகிர்ந்து கொண்டனர்.
 

சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தனது ஒரே தங்கையான வள்ளி மகன் லோகேஷை தத்து  மகனாக வளர்த்துவந்தார். அந்த ஆசை மகன் நேற்று  அமைச்சர் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

லோகேஷுக்கு அம்மா இல்லை, அப்பா இருந்தும் அவர் வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டார். அம்மா, அப்பா இல்லாத பிள்ளை என்பதால் எந்தவிதமான குறையும் ஏக்கமும் வந்துவிடக்கூடாது என்று அமைச்சர் சண்முகம்.அவ்வளவு சொகுசாக வளர்த்தார்.

இருந்தாலும் பாசத்திற்கு அம்மா, அப்பா இல்லாதது,லோகேஷுக்கு சொல்லமுடியாத அளவுக்குக் குறையாகவே இருந்துள்ளது, இதுவே லோகேஷை பலமுறை வாட்டியெடுத்துள்ளது என்கிறார்கள் அவரின் நண்பர்கள் வட்டாரத்தினர்.

வழக்கமாகவே லோகேஷ் வீட்டிலிருக்கும்போது காலையில் எழுந்திருக்கமாட்டார் என்றும் நண்பகல்  12.00 மணி வரையில் தூங்குவாராம்.  அவரது தூக்கத்தை வீட்டார்கள் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்களாம். ஆனால் நேற்று மாலை வரையில் எழுத்திருக்கவில்லை என்ற சந்தேகப்பட்டுத்தான் பர்சனல் ஓட்டுநர் கதவைத் தட்டியபோதுதான் லோகேஷ் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அமைச்சர் வட்டாரம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது. பொதுவாக விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் அமைச்சர் சண்முகத்திடமும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனிடமும்  நல்ல இணக்கமாக இருந்து வருகிறார்கள். மேடையில் விமர்சனம் செய்துகொள்வார்கள், மேடையைவிட்டு வெளியேறியதும் பரஸ்பரமாகப் பேசிக்கொள்வார்கள்.

இந்நிலையில் அமைச்சர் தங்கை மகன் தற்கொலை செய்தி கேள்விப்பட்டு, திமுக மாவட்டச் செயலாளர்களான பொன்முடி, மஸ்தான், மாசிலாமணி, போன்றவர்கள் இரவே சென்று ஆறுதல் சொல்லத் துடித்தனர்.

தேர்தல் நேரம் என்பதால், திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்றபிறகு, இன்று காலையில் பொன்முடி தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சென்று லோகேஷ்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளார்கள். அதன் பிறகு ஜெகத்ரட்சகன் எம்.பி, சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளார்.

click me!